
எதிர்பார்க்கும் நேரத்தில் எதிர்பாராததை கொடுப்பது தான் வாழ்க்கை. அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பதினாறாம் திகதி நான் நிச்சயம் எதிர்பார்த்திருந்த ஒரு நாளாகும். ஐந்து மாதங்களாக வீட்டிலேயே முடங்கிக்கிடந்த எனக்கு எமது பல்கலைக்கழக ரோட்டரக்ட் கலப் ஒழுங்கமைத்த “அகங்கார” நிகழ்ச்சித்திட்டம் பற்றி கேள்விப்பட்ட போது வெளியில் செல்ல ஒரு வாய்ப்பாகவே முதலில் தோன்றியது. ஆனால் அன்று நான் அதில் பங்குபற்றிய போது பெற்றுக்கொண்ட அனுபவங்களை நான் நிச்சயம் எதிர்பார்த்திருக்க வில்லை.
அன்று காலை நாம் கல்லூரியை சென்றடைய எடுத்த பேருந்து பயணம், அந்த பாடசாலையின் பச்சை பசேல் என்ற தோற்றம், அங்கு எமக்கு காலை உணவுடன் கிடைத்த அன்பான வரவேற்பு இவையாவும். இன்றும் என் நினைவில் மறையாமல் உள்ளது. அங்கு கல்வி கற்க வந்த மாணவர்கள், அவர்களது கல்வி ஆர்வம் மற்றும் அவர்களது முகங்களில் காலை முதல் மாலை வரை மறையாமல் இருந்த புன்னகை அனைத்தும் அந்நாளை மிகவும் சிறப்பானதாக மாற்றியன. மேலும் அன்று எம்முடன் வந்த மூத்த பல்கலைக்கழக சகோதர சகோதரிகள் எம்மிடம் நட்புடனும், அரவணைப்புடனும் பழகியதோடு, நாம் பாதுகாப்பாக வீடு செல்லும் வரை எம்மை அவர்களது பொறுப்பாக ஏற்று வழிகாட்டுதலும் வழங்கினர். அன்று வீடு திரும்பியபோது, ஒரு மனநிறைவு மற்றும் மீண்டும் செல்ல வேண்டும் என்ற ஆர்வமும் இருந்தது. அந்நாள் நான் எனது வாழ்வில் நான் நிச்சயம் மறக்க முடியாத ஒரு நாளாகும்.
அ. சாயகி

Nice one Sayagi. Just felt it like I was there