
முடியாத இலக்கை நோக்கிய இன்பப் பயணம் வான் மேல் பறந்திட வழி வழியாக நடந்திட வரிசையாய் கதை எழுத வழக்கம் போன்ற ஆவல் வானத்து தோணியது வா என்றெனை அழைக்க வரிசையில் மேலேறி வாகனத்துள் நான் நுழைய வாஞ்சையுடன் என் காதல் - வான்மதியவள் வா என்று கை கொடுக்க யன்னலோர இருக்கையில் நான் அமர்ந்து பறக்கின்றேன் வான் காணும் மேகமெல்லாம் மெல்ல மெல்ல நகர்கிறது அந்தோ அம்மாவின் குரல் என்னை யன்னலோரம் அழைக்கிறது மீண்டும் இது கனவாக விடிவதற்குள் முடிந்து போனது மோகம் தீர்ந்து விட்டால் கனவாக போய்விடுமே என கனவில் தினம் காணும் - பயணம் என் நனவில் ஒருநாள் நிதர்சனமாகும் இன்பப் பயணம்
By Rtr. Dilakshan Vijenthirakumar
Image Credits :

Leave a Reply