
கழனியிலே கதிரறுத்து கதிரவனுக்கு நன்றி சொல்லி
தரணியிலே தமிழரெல்லாம் களித்திருக்கும் திருநாளாம்;
மாவிலை தோரணம் கட்டி சாணியால் மெழுகிவிட்டு
அழகான கோலமிட்டு புது அடுப்பை வைத்திடுவோம்;
புதுப்பானை கழுத்தினிலே இஞ்சி இலை மஞ்சள் இலை
புதுப்பானை நெஞ்சினிலே நீறு பூசி பொட்டிட்டு;
பூரணமாய் நீர் நிரப்பி பசும்பாலையும் இட்டு
பாளை வைத்து நெருப்பு மூட்டி பக்குவமாய் பானை வைப்போம்;
பால் பொங்கி வரும் வேளை பட்டாசும் வெடித்திடுவோம்
பால் பொங்கி வழியும் திசை பலனெல்லாம் கூறிடுவோம்;
புத்தரிசி புதுவெல்லம் பச்சைப்பயறிட்டு பொங்கல் செய்வோம்
பொங்கலோ பொங்கலென்று குலவையிட்டு மகிழ்ந்திடுவோம்!
By Rtr. Sayagi Asogan
Image Credits:
Leave a Reply