நோய் மற்றும் தடுப்புக்கான அடிப்படைகள்.
உடலில் ஏற்படும் அசாதாரண நிலை அல்லது ஏதேனும் ஒரு பகுதி செயலிழப்பதை நாம் நோய் என்போம். தொற்றுகள் மற்றும் சுற்றுச் சூழல் காரணிகளால் பொதுவாக நோய் ஏற்படுகிறது. பாக்டீரியா, வைரஸ் மற்றும் ஏனைய நுண்ணுயிர்கள் இவற்றுள் பிரதான காரணிகளாகும். சாதாரண நோய் முதல் ஆட்கொல்லி நோய் என இன்றைய சூழலில் நாம் பல நோய்களுக்கு முகம் கொடுத்துக்கொண்டிருக்கின்றோம்.
இவ்வாறான அனைத்து நோய்களுக்கும் மருந்துகள் இல்லாத போதிலும், அவற்றின் பாதிப்புக்களை குறைப்பதற்கான பல மருத்துவ முறைகள் இன்று காணப்படுகின்றன. இவற்றை நாம் சாதாரணமாக பயன்படுத்தும் மாத்திரைகள் முதல் அறுவை சிகிச்சை, உடல் பாகங்களை மாற்றுதல் என பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம்.
இதே போல நோய் பரவுவதற்கான பல்வேறு காரணிகளையும் எமக்கு பட்டியல் படுத்தலாம். இவற்றுள் உடலில் உள்ள திரவங்களுடனான (இரத்தம்,உமிழ்நீர்) தொடர்பு , பொது இடங்களில் தொற்றுக்குள்ளான ஒருவருடனான தொடர்பு போன்றன சில முக்கிய காரணிகளாகும்.
இன்றைக்கும் நோய்கள் பாக்டீரியா தொற்று முதல் வைரஸ் தொற்று வரை மாறுபட்டுக் காணப்படுகின்றன. பொதுவாக வைரஸ் தொற்றானது பாக்டீரியா தொற்றை விட பாதிப்பு குறைவாக இருந்த போதிலும் சில வைரஸ்கள் மிக கொடியவையாக உள்ளன. நோய்கள் கடத்தப்படும் முறைக்கேற்பவும் பாகுபடுத்தலாம். உதாரணமாக வளி மற்றும் தவறான பாலியல் தொடர்புகளை கூறலாம்.
நாம் எப்படி நோய்வாய்ப்படுகின்றோம்?
நோய்கள் பரவுவதற்கு மூன்று முக்கிய வழிகள் உள்ளன: பாதிக்கப்பட்ட நபர் ஒருவருடனான தொடர்பு, பாதிக்கப்பட்ட மேற்பரப்புடன் தொடர்பு அல்லது பாதிக்கப்பட்ட விலங்குடனான தொடர்பு, பாதிக்கப்பட்ட மிருகம் அல்லது மேற்பரப்பைத்தொட்டு பின்னர் உங்கள் வாய் அல்லது மூக்கைத் தொடுவதன் மூலமும் நோய்கள் பரவும். யாராவது அருகில் இருமினால் அல்லது தும்மினால் நிமோனியா போன்ற சில நோய்களும் காற்றில் பரவலாம்.
நோய்க்கான அறிகுறிகள் மற்றும் குறித்த நோய்களை கண்டறிதல்.
நீங்கள் ஒரு நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை அடையாளம் காண சிறந்த வழி, அறிகுறிகளை சோதிப்பதாகும். இவற்றுள் உங்கள் நடத்தையில் ஏற்படும் சில அசாதாரணநிலை அல்லது உடல் பாகங்களில் ஏற்படும் வீக்கம், சிவத்தல், வலி அல்லது அரிப்பு போன்றவற்றை குறிப்பிடலாம். சில நோய்களுக்கு அறிகுறிகள் எதுவும் தெரியாமல் இருக்கலாம். இது போன்ற சந்தர்ப்பங்களில் நாம் ஒரு பரிசோதனை செய்ய வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் நாம் நோய்களை கண்டரிவதற்குரிய சில விசேட சோதனைகளை முன்னெடுப்போம். இச்சோதனைகளை அவற்றை நடை முறைப்படுத்தும் விதத்திற்கேற்ப இரண்டு வகையாக பிரிக்கலாம். சிலர் சுயமாகவே நோயை கண்டறிவதுடன் மற்றவர்கள் தமது நோய்களை மருத்துவ மேற்பார்வையின் உதவியுடன் கண்டறிகின்றனர். வீக்கங்கள், திட்டுகள் அல்லது சில உறுப்புகளில் காயங்கள் உள்ளதா என்று சோதிப்பது போன்ற பெரும்பாலான வெளிப்புற நோயறிதல்களை நாமே செய்ய முடியும். ஆனால் உள் நோயறிதல் எப்போதும் மருத்துவ மேற்பார்வையின் கீழ் செய்யப்பட வேண்டும். சில பொதுவான நோயறிதல் முறைகளாக உண்ணாவிரததின் பின்னரான இரத்த சர்க்கரையின் அளவு , மற்றும் குருதிக் கலங்களின் எண்ணிக்கை போன்றவற்றின் உதவியுடன் நோய்களைக் கண்டறியும் முறைகளைக் கூறலாம்.
உலகில் காணப்படும் பொதுவான நோய்களும் அவற்றை எதிர்த்துப் போராடுவதற்காக மேட்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளும்.
இன்று உலகம் பல பொதுவான உடல்நலப் பிரச்சினைகளை எதிர் கொண்டவண்ணம் உள்ளது. அவற்றுள், பல தொற்று நோய்களினாலும் தொற்றாத நோய்களினாலும் உலக மக்கள் தொகையில் பாரிய குறைவு ஏட்பட்டுள்ளதோடு, ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும் உள்ளனர். உலகில் உள்ள சில முக்கிய நோய்களாக புற்றுநோய், மலேரியா மற்றும் தற்போதுள்ள SARS Covid-19 என்பவற்றை கூறலாம். புற்று நோய்களினால் நீண்ட காலமாக மனிதர்கள் போராடிக்க கொண்டிருக்கின்றபோதிலும், இது வரையில் மனிதர்களால் அதற்கான சரியான மருந்தை கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளமை ஒரு தோல்வியாகவே கருதப்படுகின்றது.
Covid-19 தற்போது ஒரு கொடிய நோயாக மாறியுள்ளது , ஏனெனில் இது வேகமாக பரவி பலரை பாதிக்க வைத்துள்ளதோடு மூச்சுத் திணறல் போன்றவற்றையும் ஏற்படுத்துகின்றது. அது இறுதியில் நிமோனியாவாக மாறி மரணம் வரை கொண்டு செல்லவும் வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன. வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படுகின்ற போதிலும் அவற்றினூடாக முழுமையான செயலாற்றலை இதுவரையில் கண்டுகொள்ள முடியாதுள்ளமை குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாகும்.
ஆரோக்கியமற்ற உலகில் ஆரோக்கியமாக இருப்பது எப்படி?
நவீன உலகில் பெரும்பாலான மக்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டுமா அல்லது நோய்வாய்ப்பட வேண்டுமா என்ற கடினமான தேர்வை எடுக்க வேண்டிய முக்கிய பிரச்சனை இது. உணவு, பானம், சூழல் மற்றும் சில நடை முறைகள் கூட நம்மை நோயாளராக்க வழிவகுக்கிறன. எனவே ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப்பற்றி எம்மை அறிவூட்டிக் கொள்வதே ஆரோக்கியமாக இருக்க சிறந்த வழியாகும். வீட்டில் தயாரிக்கப்பட்ட ஆரோக்கியமான உணவிற்கு பழகிக் கொள்வது, நிறைய தண்ணீர் குடிப்பது, தெருக்கடைகளில் உணவுகளை வாங்கி உட்கொள்ளவத்தைக் குறைப்பது, புகை பிடித்தல் மற்றும் மதுவை தவிர்ப்பது, தினமும் உடற்பயிற்சி செய்வது ஆகியவை ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தொடர்வதற்கு நாம் பின்பற்ற முடியுமான சில சிறந்த பழக்கவழக்கங்கள் ஆகும். உண்மையில் நோய் தொற்றுக்குள்ளான பின் குணப்படுத்துவதை பற்றி சிந்திப்பதை விட நோய் வராமல் தவிர்ப்பதற்கான வழிகளை சிந்திப்பதே சாலச்சிறந்தது.
“வரும் முன் காப்பதே சிறந்தது!”
பாதுகாப்பாக இருப்பபோம் ! ஆரோக்கியமாக வாழ்வோம்!
By Rtr. மொஹமட் இசாட்
Image Credits:
Sayagi says
Nice one Izad! 🔥